நாசிக் மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், “மிக துயர சம்பவம் நடந்துள்ளது. எனது ஆழ்ந்த இரங்கலை இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மாநில அரசும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்து தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
நாசிக் மருத்துவமனையில் சோகம்: ஆக்சிஜன் குறைபாட்டால் 22 பேர் மரணம்! - oxygen accident in maharashtra hospital
17:13 April 21
அனைத்து விதமான உதவிகளையும் செய்யுங்கள் - தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
16:56 April 21
நாசிக் மருத்துவமனை மரணங்கள் வலியை ஏற்படுத்துகிறது - பிரதமர் உருக்கம்!
நாசிக் மருத்துவமனையில் பிராண வாயு குறைபாட்டால் ஏற்பட்ட மரணங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில், “பிராண வாயு கசிவால் நாசிக் மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மனதை வருந்த செய்கிறது. இந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழப்புகளை தாங்கி நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
14:41 April 21
மகாராஷ்டிரா மாநில நாசிக் மருத்துமனையில், பிராண வாயு சேமிக்கும் டேங்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா நோயாளிகளுக்கு பிராண வாயு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது கூடுதலாக 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிராண வாயு குறைபாட்டால் நாசிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
பிராண வாயு பற்றாக்குறையால் இறந்ததாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் ராஜேந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். இறந்து போன அனைவரும் செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என்றும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நோயாளிகள் உயிரிழந்த செய்தி கேள்விப்பட்டதும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாற்று பிராண வாயு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் 171 பேர் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். சம்பவ இடத்தை மாநில அமைச்சர் சகன் புஜ்பால் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜும் 22 பேர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளார். டேங்கில் இருந்து கசிந்த பிராண வாயு மருத்துவமனையை சுற்றி வெண்புகை போல் பரவி இருந்தது.