தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை : மாநில அரசுகளுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு - மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக மாநிலங்களுக்கு பத்தாவது தவணையாக 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை

By

Published : Jan 5, 2021, 5:14 PM IST

டெல்லி:சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை எதிர்கொள்வதற்காக பத்தாவது தவணையாக, மாநில அரசுகளுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.

இதிலிருந்து, 23 மாநிலங்களுக்கு 5 ஆயிரத்து 516 கோடி ரூபாயும், ரூபாய் 483.40 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (டெல்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) 483 கோடி ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

இதர ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தாததால் எந்த விதமான வருவாய் பாதிப்பும் இல்லை.

சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் மத்திய அரசு இந்தக் கடனை வாங்குகிறது. இதுவரை இந்த சாளரத்தின் கீழ், 60 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாக பெற்றுள்ளது.

மேலும், மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற்றுக்கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரத்து 627 கோடி கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டு, தற்போதுவரை 3 ஆயிரத்து 870 கோடிவரை கடன் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தகன மேடை இடிந்து விழுந்த விவகாரம் - கட்டுமான ஒப்பந்ததாரர் கைது

ABOUT THE AUTHOR

...view details