தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு? - 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10th-12th-cbse-results
10th-12th-cbse-results

By

Published : Jan 24, 2022, 3:35 PM IST

கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வுகள் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தத் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருந்த நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 2022ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பருவத்தேர்வு முடிவு சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in மற்றும் cbse.gov.in இணைய தளங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details