நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆம் அலை குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 426 மாணவர்கள், 49 பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் பல மாணவர்களுக்கு உருமாற்றம் பெற்ற, ஏஒய்.4.2 கரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
107 மாணவர்களுக்கு கரோனா
இதையடுத்து, மகாராஷ்டிராவிலும், பெங்களூருவிலும் இந்த வைரஸ் பரவிய நிலையில், நேற்று(டிச.5) கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 107 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலருக்கு ஏஒய்.4.2 தொற்று இருப்பதாக தகவல்கள் பரவிவருகின்றன.