தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடன் செயலி மோசடி - 12 நிதி நிறுவனங்களின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.105 கோடி பறிமுதல்! - தெலங்கானாவில் ஆன்லைன் கடன் செயலி மோசடி

கடன் செயலி மோசடி வழக்குகளில் தொடர்புடைய 12 நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 105 கோடி ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

rupees
rupees

By

Published : Aug 4, 2022, 5:34 PM IST

ஹைதராபாத்:தெலங்கானாவில் ஆன்லைனில் விரைவாக கடன் வழங்கும் சில செயலிகள், கடனைத் திரும்ப வசூலிக்கும்போது வாடிக்கையாளர்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகப் புகார்கள் எழுந்தன.

கரோனா காலத்தில் இந்தப்புகார்கள் அதிகரித்தன. இந்த கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகளும் வெளியாகின. இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகள் வாடிக்கையாளர்களை துன்புறுத்துவது தொடர்பாக ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறையினர் ஏராளமான வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

இந்த கடன் செயலி மோசடி வழக்குகளை பணமோசடி தடுப்புச்சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்குகளில் தொடர்புடைய 12 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) வங்கிக் கணக்குகளில் இருந்து 105 கோடி ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இண்டி டிரேட் ஃபின்கார்ப், அக்லு ஃபின்டிரேட் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச்சொந்தமான 223 வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த 12 நிதி நிறுவனங்களிலும் சீனாவின் ஃபின்டெக் குழும நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அலுவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சந்தேகத்திற்குரிய ஆன்லைன் கடன் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details