கன்னூர்(கேரளா):கேரளா மாநிலம் கன்னூர் பகுதியைச் சேர்ந்த ஜானகியம்மா(104) என்ற மூதாட்டிக்கு கடந்த மே 31ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்த கன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மூதாட்டிக்கு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவ பணியாளர்களுக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.