டெல்லி:இதுகுறித்து மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவர் ஸ்வாதி மாலிவால் அனுப்பியுள்ள கடிதத்தில், “நிர்பயா 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில்தான் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கொடூரமான சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டன.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பல சட்ட சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது. ஆனால், இன்றும் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் தலைநகரில் தினமும் 6 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
டெல்லியில் 8 மாத குழந்தையும், 90 வயது மூதாட்டியும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் கூட, டெல்லியின் துவாரகாவில் உள்ள 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் பெண்கள் மீதான வன்முறைகளை குறைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கங்கள் தவறி வருகின்றன. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிர்பயா நிதியும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்றைய நாடாளுமன்ற அலுவல்களை நிறுத்தி வைத்து, பெண்கள் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை - காரணமான 14 வயது சிறுவன் கைது