தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு அரசுப்பணி காலியிடத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு அரசுப்பணி காலியிடத்திற்கு 22,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Etv Bharatஒரு அரசுப்பணி  காலியிடத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
Etv Bharatஒரு அரசுப்பணி காலியிடத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

By

Published : Oct 2, 2022, 8:38 AM IST

ஹமிர்பூர்: ஹமிர்பூரில் அமைந்துள்ள இமாச்சல பிரதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள ஜூனியர் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு இமாச்சல பிரதேச பணியாளர் தேர்வு ஆணையம் (HPSSB) அறிவிப்பு வெளியிட்டது. இப்பதவிக்கு இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 43 மையங்களில் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவதற்கு மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பதவிக்கு இதுவரை 22,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதன் காரணமாக் விண்ணப்பத்தவர்களில் 10,386 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரோல் எண்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ 360, பின் தங்கிய பிரிவினருக்கு ரூ 120 பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை என தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஒரு காலி இடத்திற்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘மாநிலத்தின் 12 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:நக்சல்களின் பிடியிலிருந்த கிராமத்தை கல்வியால் மாற்றி வரும் நக்சல் தலைவரின் மருமகள்...!

ABOUT THE AUTHOR

...view details