தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமர்நாத் குகை கோயில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு - மீட்புப்பணிகள் தீவிரம்! - risk in amarnath yatra

அமர்நாத் குகைக்கோயிலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அமர்நாத் குகை கோயில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு - மீட்புப்பணிகள் தீவிரம்!
அமர்நாத் குகை கோயில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு - மீட்புப்பணிகள் தீவிரம்!

By

Published : Jul 8, 2022, 8:57 PM IST

ஸ்ரீநகர் (காஷ்மீர்): தெற்கு காஷ்மீரின் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். அமர்நாத் அருகே ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இந்தோ - திபெத்திய எல்லை காவல் துறையினர் கூறுகையில், "சில உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும் தற்போது மீட்புக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தோ - திபெத்திய எல்லை காவல்துறையினர், மற்ற அமைப்புகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேரை காணவில்லை. மேலும், இந்த தொடர் மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

அமர்நாத் குகை கோயில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு - மீட்புப்பணிகள் தீவிரம்!

இதையும் படிங்க:Video: வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து - 25 மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details