தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு - எதிர்க்கட்சிகள் கூறிய காரணம் இதுதான்.. - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

பிரதமர் மோடி தலைமையிலான 8 வது தேசிய திட்டக் குழுவான நிதி ஆயோக்கின் ஆண்டுக் கூட்டத்தில் எதிர் கட்சிகள் பங்கு பெறதாதது அசாத்திய சூழலை ஏற்ப்படுத்தியுள்ளது.

8 வது தேசிய திட்டக் குழுவான நிதி ஆயோக்கின் ஆண்டுக்கூட்டத்தைப் புறக்கணித்த எதிர்கட்சிகள்
8 வது தேசிய திட்டக் குழுவான நிதி ஆயோக்கின் ஆண்டுக்கூட்டத்தைப் புறக்கணித்த எதிர்கட்சிகள்

By

Published : May 27, 2023, 5:43 PM IST

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான 8 வது தேசிய திட்டக் குழுவான நிதி ஆயோக்கின் ஆண்டுக் கூட்டம் இன்று பிரகதி மைதானத்தில் புதிய மாநாட்டு மையத்தில் பல்வேறு விவாதங்களுடனும் திட்ட முனைப்புகளுடனும் நடைபெற்ற முடிந்தது. கடந்த ஆண்டு கரோனாவின் காரணமாக நடக்காமல் தடைபட்ட நிதி ஆயோக்கின் ஆண்டுக்கூட்டம் இந்தாண்டு புதிய திட்டங்களுடன் நடைபெற வழிவகுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர் பார்க்கப் பட்டிருந்த நிலையில் பெரும்பாலான எதிர் கட்சிகள் இக்கூட்டத்தினை தவிர்த்துள்ளது அசாத்தியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் சுகாதாரம், வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, பெண்கள் முன்னேற்றங்கள் போன்றவைகளும் அடிப்படை வளர்ச்சிகளை மேம்படுத்தவும் முடிவுகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்து. இது மட்டுமின்றி இந்த ஆண்டுக் கூட்டமானது விக்‌ஷீத் பாரத்@2047: ரோல் ஆஃப் இந்தியா(vikisit bharat@2047: role of india) என்ற தலைப்பில் எட்டு முக்கிய அம்சங்களை முன்முனையாக முன்னிறுத்தி நடந்தது.

விக்‌ஷீத் பாரத்@2047, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முனைப்பு, உள்கட்டமைப்பு, பெண்களின் வளர்ச்சி மேம்பாடு, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, திறன் வளர்ச்சி, சமூக உள்கட்டமைப்புக்கான கதி சக்தி மற்றும் பகுதி மேம்பாடு என எட்டு அம்சங்களாக நாட்டின் வளர்ச்சி கூறுகள் பிரிக்கப்பட்டு அதனை மையமாகக் கொண்டு ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப் பட்டது. இந்த கூட்டத்தில் பங்குபெற மாநிலத்தின் முதல் அமைச்சர்கள், யூனியன் பிரேதசங்களின் துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் என நிதி ஆயோக்கின் நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.

நிதி ஆயோக்கின் ஆண்டுக்கூட்டம் இம்மாதம் 27 ஆம் தேதி அதாவது இன்று நடைபெறும் என முன்னரே அறிவித்திருந்த நிலையில், 10 எதிர் கட்சிகள் நிதி ஆயோக்கின் ஆண்டுக் கூட்டத்தினை புறக்கணித்துள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன்,கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் சித்தராம்மையா மற்றும் அஷோக் கெலட்,

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பேனர்ஜி, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் கே.சந்திரசேகர் ராவ், ஒடிசாவில் பிஜு ஜனதா தள கட்சியின் நவீன் பட்நாயக், பீகாரில் ஜனதா தள கட்சியின் நிதீஸ் குமார் ஆகியோர் இந்தக் கூட்டத்தினை தவிர்த்துள்ளனர். மேலும் இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணிப்பிற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

அதில், “மாநிலத்தின் மேம்பாடுகளில் அரசாங்கத்தின் உறுதிபடுத்தா நிலையினாலும், மாநிலத்தின் நலத்திட்டங்கள் எதிர்க்கப்படுகின்றதனாலும் புறக்கணிக்கப் பட்டுள்ளது. இந்தக் கூட்டுறவு கூட்டாச்சி நகைப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் முதலமைச்சரான பகவந்த் மான் கூறுகையில், “பஞ்சாப்பின் நலன் குறித்து எந்த திட்டங்களும் கண்டுகொள்ளப் படவில்லை அதனால் இந்த புறக்கணிப்பு நிகழ்ந்தது” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதீஸ் குமார், “நிதி ஆயோக் கூட்டத்திலும் பாராளுமன்ற்த்தின் புதிய கட்டிட திறப்பில் பங்குபெறுவது அர்த்தமற்றது எந்த பயனும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! 24 பேர் அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

ABOUT THE AUTHOR

...view details