சென்னை:சென்னையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தூரத்தில் கடலில் எண்ணெய் கசிவு இருப்பதாக, கொழும்பு கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து (எம்.ஆர்.சி.சி) நேற்று முன்தினம் (ஜூன்.16), இந்திய கடலோர காவல்படைக்கு (ஐ.சி.ஜி) தகவல் கிடைத்தது.
இதுதொடர்பான உயர் மட்ட விசாரணையில், கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்குச் செல்லும் வழியில், எம்.வி.டெவன் என்ற போர்த்துகீசிய கொள்கலன் கப்பலின், எரிபொருள் தொட்டியில் (நீருக்கடியில்) விரிசல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதில், சுமார் 120 கிலோ லிட்டர், மிகக்குறைந்த சல்பர் எரிபொருள் எண்ணெய் இருந்தது.
தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர், சுமார் 10 கிலோ லிட்டர் எண்ணெய் கடலுக்குள் கசிந்ததால், தொட்டியில் மீதமுள்ள எண்ணெய்யை கப்பல் குழுவினர் மற்றொரு தொட்டிக்கு மாற்றினர்.