புதுச்சேரி மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றானது படிப்படியாகக் குறைய தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துவருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 56 ஆயிரத்து 305 பேருக்கு தொற்று இருப்பதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக மருத்துவமனைகளில் 1,612 பேரும், வீடுகளில் 6,832 பேரும் என மொத்தம் 8,444 பேர் கரோனா நோய்த்தொற்று காரணமாக சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 47 ஆயிரத்து 80 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமாகிவிட்டனர்.
மேலும் இதுநாள் வரை 781 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் புதுச்சேரியில் ஏழு லட்சத்து 80 ஆயிரத்து 162 பேருக்கு கோவிட் மருத்துவப் பரிசோதனை செய்ததில், ஏழு லட்சத்து 35 பேருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஒருநாளில் 6,833 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 1,258 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தவிர 632 பேர் நோய்த்தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் கடந்த ஒரு நாளில் கரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.