சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களான ஹர்பால் சிங் சீமா (Harpal Singh Cheema) மற்றும் குல்தீப் சிங் தலிவால் (Kuldeep Singh Dhaliwal) ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இணைகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய 10 அமைச்சர்கள் குறித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 18) ட்விட்டரில் முதலமைச்சர் பகவந்த் மான், “பஞ்சாப் புதிய அமைச்சரவை நாளை (அதாவது இன்று) பதவியேற்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மக்கள் நமக்கு பொறுப்பை வழங்கியுள்ளார்கள். நாம் மக்களுக்காக இரவு-பகல் பாராது கடுமையாக உழைத்து ஒரு நேர்மையான அரசாங்கத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
பஞ்சாப் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள்..
- ஹர்பால் சிங் சீமா
- பல்ஜித் கவுர்
- ஹர்பஜன் சிங் ETO
- விஜய் சிங்லா
- லால் சந்த் கட்டருசக்
- குர்மீத் சிங் மீட் ஹேயர்
- குல்தீப் சிங் தலிவால்
- லால்ஜித் சிங் புல்லர்
- பிராம் ஷங்கர்
- ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் ஆகியோர் ஆவார்கள்.