சிவமோகா: காந்தி பஜார், மடிவாலா காலனியைச் சேர்ந்த உதய் - சைத்ரா தம்பதியினரின் ஒரே குழந்தை உதம். இக்குழந்தை சில நாட்களுக்கு முன்பு வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
கரோனா தொற்றால் உயிரிழந்த 1 வயது குழந்தை! - கர்நாடகா செய்திகள்
கர்நாடகாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு வயது குழந்தை, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![கரோனா தொற்றால் உயிரிழந்த 1 வயது குழந்தை! கரோனா தொற்று](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11960461-thumbnail-3x2-baby.jpg)
கரோனா தொற்று
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் குழந்தையை மெக்கன்(mcgann) மருத்துவமனைக்கு மாற்றினர்.
அப்போது, அக்குழந்தைக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுத் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று(மே.30) திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகக் குழந்தை உயிரிழந்தது. இம்மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களில் மிகக் குறைந்த வயதுடையவர் இந்த குழந்தை தான். இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.