ஐஸ்வால்: மிசோரத்தில் மக்கள் தொகை குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், விளையாட்டுத் துறை அமைச்சர் ராபாட் ரோமாவியா ராய்டே விநோத சலுகை ஒன்றை அறிவித்துள்ளார்.
அவரது தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுடன் வசிக்கும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் ராபாட் ரோமாவியா ராய்டே இருப்பினும், எத்தனை குழந்தைகள் என்ற எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை. மேலும், அந்தப் பெற்றோருக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரத்தின் மக்கள் தொகை 10 லட்சத்து 91 ஆயிரத்து 14 ஆகும். சுமார் 21 ஆயிரத்து 87 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த மாநிலம் உள்ளது.
இந்நிலையில், ஒரு சதுர கிமீ பரப்பளவுக்கு 52 நபர்கள் வசித்துவருகின்றனர். மிசோரம் இந்த சராசரியில் அருணாசலப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக குறைந்த மக்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது.
அதே சமயம், மிசோரத்திற்கு அருகில் உள்ள அஸ்ஸாமில், இரண்டு குழந்தைகள் கொள்கை என்ற நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க:தனிமரமான 90's கிட்ஸ்- சட்டத்தை மாற்றிய சீனா!