டெல்லி: மாநிலங்களவையில் பிரதாப் சிங் பஜ்வா கேள்விக்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “2018-19 முதல் 2020-21 ஜனவரி 29ஆம் தேதி வரையிலான காலத்தில் பிரதம மந்திரி மேத்ரு வந்தனா யோஜனாவின் கீழ் 1 கோடியே 83 லட்சத்து 12 ஆயிரத்து 303 பேர் பயனடைந்துள்ளனர்.
பிரதமர் திட்டத்தில் 1.83 கோடி கர்ப்பிணி பெண்களுக்கு உதவி- ஸ்மிருதி இரானி
பிரதம மந்திரி மேத்ரு வந்தனா யோஜனா (பி.எம்.எம்.வி.ஒய்) திட்டத்தின் கீழ் 2018-19 முதல் நடப்பாண்டு ஜனவரி 29ஆம் தேதி வரை மொத்தம் 1.83 கோடி கர்ப்பிணிப் பெண்கள் பலனடைந்துள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி வியாழக்கிழமை (பிப்.11) தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் 19 வயதுக்குள்ளான பெண்கள் பலரும் பதிவு செய்துள்ளனர். எனினும் 19 வயதுக்குக் குறைவான கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை பற்றிய தனித்தனி தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை” என்றார்.