தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பக்தி பரவசத்துடன் வந்த பக்தர்கள்.. இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் வேல்விழா கொடியேற்றம் கோலாகலம்! - SRI LANKA KATARAGAMa VEL FESTIVAL - SRI LANKA KATARAGAMA VEL FESTIVAL

🎬 Watch Now: Feature Video

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 6:38 PM IST

இலங்கை: இலங்கை கதிர்காமம் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் கோயில்களுள் முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ஆடி வேல்விழா இந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கானகப் பாதையை திறந்து வைத்தார். முன்னதாக, செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் கடந்த 60 நாட்களுக்குப் பின்னர், நேற்று முன்தினம் கதிர்காமத்தை அடைந்து கதிர் மலை ஏறி, அவர்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்து இருந்தனர்.  

இதுவரை இந்த கானக பாதை வழியாக சுமார் 12 ஆயிரம் அடியார்கள் பயணம் செய்து கோயிலுக்கு வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் அடங்க கொடியேற்றம் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும், ஜூலை 11ஆம் தேதி வரை காட்டுப்பாதை திறந்திருக்கும் என்பதால் இன்னும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான யாதத்திரீகர்கள் தற்போது காட்டு வழியே பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details