தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சாப்பாடு எடுத்துச் சென்றபோது பெண்ணின் நகைப்பறிப்பு.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - Chain Snatch CCTV videos - CHAIN SNATCH CCTV VIDEOS

🎬 Watch Now: Feature Video

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 5:14 PM IST

சென்னை: சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த ஆதி நகரைச் சேர்ந்தவர் சாந்தி (46). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் அதே பகுதி கிறிஸ்தவப் பள்ளி தெருவில் உள்ள தனது சகோதரர் சாய்நாத் என்பவருக்கு உணவு கொண்டு சென்றுள்ளார். அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள், சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு, சாந்தி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

பின்னர், இந்தச் சம்பவம் குறித்து சாந்தி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். அந்த சிசிடிவி காட்சியில், சாந்தி உணவு எடுத்துச் செல்லும் போது ஹெல்மட் அணிந்த மர்ம நபர்கள் பின் தொடர்வதும், தங்கச் சங்கலியைப் பறித்துச் செல்வதும், அவர்களை சாந்தி துரத்திச் செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details