தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 2:10 PM IST

ETV Bharat / videos

ஆட்டோ ஓட்டுநரும் - போக்குவரத்து காவலரும் சண்டையிடும் வீடியோ! என்ன காரணம்?

கோயம்புத்தூர் : கோவை, பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து காவலர்கள் நேற்று (பிப். 21) மாலை வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்து உள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை வழிமறித்த காவலர்கள், ஆட்டோவின் ஆர்சி புக்(RC book) மற்றும் ஓட்டுநர் உரிமம் (Driving License) ஆகியவற்றை பரிசோதித்து உள்ளனர். அப்போது ஆட்டோவை ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுது. 

மது போதையில் வாகனத்தை இயக்கியதால், அபராதம் விதிக்கப்படும் என்று காவலர்கள் கூறியதால், ஆட்டோ ஓட்டுநருக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில், ஆட்டோ ஓட்டுநர் காவலர்களை தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி உள்ளார். பதிலுக்கு ஆட்டோ ஓட்டுநரும் போக்குவரத்து காவலரை தாக்கி உள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த மற்ற போக்குவரத்து காவலர்கள், ஆட்டோ ஓட்டுநரை அடித்து, அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details