தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி பாஸ்போர்ட்களில் சென்னை வந்த வங்க தேசத்தைச் சேர்ந்த இருவர் கைது.. - Fake passports Issue - FAKE PASSPORTS ISSUE

Fake passports Issue: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, போலி பாஸ்போர்ட்களில் சென்னை வந்த வங்க தேசத்தைச் சேர்ந்த இருவரை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

Fake passports Issue
போலி பாஸ்போர்ட் விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 8:07 AM IST

சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம் (AirAsia) நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பயணிகளை வெளியே அனுப்பி வைத்தனர்.

அப்போது, மேற்குவங்க மாநில கொல்கத்தா முகவரியுடன், கோலாலம்பூரில் இருந்து இந்த விமானத்தில் சென்னை வந்த இளைஞர் மற்றும் இளம் பெண் இருவரையும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில், அவர்களிடம் சென்னையில் இருந்து ரயிலில் கொல்கத்தா செல்வதற்கான டிக்கெட்கள் இருந்தது தெரியவந்தது.

இதனால் குடியுரிமை அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே, அவர்களை வெளியே அனுப்பாமல் நிறுத்தி வைத்து, தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் இருவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்துக்குள் ரகசியமாக ஊடுருவி உள்ளதும் தெரிய வந்தது.

இதையும் படிங்க:கும்பகோணத்தில் திமுக பணப்பட்டுவாடா; அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு! - Lok Sabha Election 2024

அதன் பின்பு கொல்கத்தாவில் சில ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இருவரும் இந்திய பிரஜைகள் போல் இந்திய பாஸ்போர்ட்டுகளை வாங்கி உள்ளனர். பின்னர் அந்த போலி பாஸ்போர்ட்டுகள் மூலம், மலேசிய நாட்டிற்கு சென்று சில மாதங்கள் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, அதன் பின்பு போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் தற்போது சென்னை திரும்பி வந்துள்ளதும் தெரியவந்தது.

இவர்கள் நேரடியாக விமானத்தில் கொல்கத்தா சென்றால், அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் போலி பாஸ்போர்ட்டுகளை கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில், சென்னையிருந்து ரயிலில் கொல்கத்தா செல்ல இருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவில் இருந்து, சென்னைக்கு வந்த வங்கதேச இளம் பெண் மற்றும் இளைஞரை கைது செய்தனர். அதோடு மேல் நடவடிக்கைக்காக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024; தென்மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்! - Election Special Trains

ABOUT THE AUTHOR

...view details