சென்னை:தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டில் சேர்வதற்கு மே 6ந் தேதி முதல் 20 ந் தேதி வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஏற்கனவே அறிவித்தபடி இன்றுடன் (திங்கள்கிழமை) மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு பெற இருந்தது. இந்த நிலையில் மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று வரும் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்களுக்காக சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இம்மையங்களின் பட்டியல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்தாண்டை போலவே மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்தப்பின்னர் ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 27 ந் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.