தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து.. திருப்பூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. - TIRUPPUR SANITARY WORKERS FEAST

'இயேசுவின் சமாதானம்' என்ற அமைப்பின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமபந்தி விருந்தில் கலந்துகொண்ட தூய்மைப் பணியாளர்கள்
சமபந்தி விருந்தில் கலந்துகொண்ட தூய்மைப் பணியாளர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 6:06 PM IST

திருப்பூர்:திருப்பூரில் இயேசுவின் சமாதானம் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் 250க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெற்கு ரோட்டரி சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த சமபந்தி விருந்து 'இயேசுவின் சமாதானம்' அறக்கட்டளையின் அறங்காவலர் ராபின் தலைமையில் நடைபெற்ற நிலையில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விருந்து (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:சாமியே சரணம் ஐயப்பா! தொடங்கியது சபரிமலை ஐயப்பன் யாத்திரை விரதம்

மேயர் தினேஷ்குமார் தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வழங்கிய நிலையில் 'இயேசுவின் சமாதானம்' அறக்கட்டளையின் அறங்காவலர் ராபின் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான உணவுகளை பரிமாறினார்.

இந்த சமபந்தி விருந்தில் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவரும் 57வது மாமன்ற உறுப்பினருமான கவிதா நேதாஜி கண்ணன், மாநகராட்சி கல்விக் குழு தலைவரும் 36வது வார்டு மாமன்ற உறுப்பினருமான திவாகரன், மாநகராட்சி நகர் நல அலுவலர் முருகானந்தம், சுகாதார அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சின்னதுரை, திரைப்பட நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details