தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனையூரில் பறந்த தமிழக வெற்றிக் கழகம் கொடி.. ஒத்திகை பார்த்த விஜய்! - tvk Flag hoisted - TVK FLAG HOISTED

TVK President Vijay: தவெக கட்சியின் கொடி அறிமுக விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று பனையூரில் இருக்கும் கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சிக் கொடியினை ஏற்றி ஒத்திகை பார்த்தார். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற வீடியோவின்படி, கொடியானது முழுவதும் மஞ்சள் நிறத்திலும், நடுவில் விஜய் படத்துடனும் உள்ளது.

தவெக கொடியினை ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய்
தவெக கொடியினை ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 6:33 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வரும் 22ஆம் தேதியன்று கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெறவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், அலுவலக வளாகத்தினுள் நிறுவப்பட்டுள்ள சுமார் 40 அடி உயரம் உள்ள கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி விஜய் அறிமுகப்படுத்த உள்ளார்.

கொடி அறிமுக விழாவையொட்டி, சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விழா ஏற்பாடுகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பணிகளை ஆய்வு மேற்கொள்ள, கொடி அறிமுக விழா நடைபெறவுள்ள தலைமை அலுவலகத்திற்கு கருப்பு நிற ஆடையில் BMW சொகுசு காரை தானே ஓட்டிக் கொண்டு வந்த அக்கட்சியின் தலைவர் விஜய், அலுவலகத்திற்கு முன்னதாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தார். இந்தக் கொடியானது மஞ்சள் நிறத்திலும், நடுவில் விஜய் படம் கொண்டதாகவும் உள்ளது.

விஜய் கருப்பு நிற ஆடையிலும், புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் நிற ஆடையிலும் கட்சியின் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தனர். இந்த கொடி அறிமுகம் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 250 முதல் 300 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நேற்று பெளர்ணமி என்பதால் புஸ்ஸி ஆனந்த் கட்சிக் கொடியினை வைத்து பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:"பெர்லின் டூ ராஜாக்கூர்"... சொந்த ஊரில் கொட்டுக்காளி படக்குழுவினரை கௌரவித்த சூரி! - soori honoured kottukkali team

ABOUT THE AUTHOR

...view details