சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், சுமார் ரூ.2,438 கோடி பொதுமக்களிடம் மோசடி செய்தது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், 25வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "நான் ஆருத்ரா நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராக இணைந்து, கிளைக்கு வருபவர்களிடம் இருந்து பணத்தை வாங்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டேன். விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் நான் திடீரென கைது செய்யப்பட்டு, 200 நாட்களுக்கும் மேல் சிறையில் இருக்கிறேன். ஆதலால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.