தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் உதயநிதி ஆய்விற்குப் பின், விடுதியில் இரவோடு இரவாக நடந்த தூய்மைப் பணிகள்! - Udhayanidhi Stalin inspection

Minister Udhayanidhi Stalin: கோவையில் உள்ள அரசு விடுதியில், நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆய்விற்குப் பிறகு, அதிகாரிகள் இரவோடு இரவாகத் தூய்மைப் பணிகளை முடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

hostel cleaning work that took place overnight After Minister Udhayanidhi Stalin inspection in Coimbatore
அமைச்சர் உதயநிதி ஆய்விற்கு பிறகு விடுதியில் இரவோடு இரவாக நடந்த தூய்மைப் பணிகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 8:23 PM IST

அமைச்சர் உதயநிதி ஆய்விற்குப் பின், விடுதியில் இரவோடு இரவாக நடந்த தூய்மைப் பணிகள்!

கோயம்புத்தூர்: கோவையில் இன்று (பிப்.29) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து, விமான நிலையம் வந்த உதயநிதி பாலசுந்தரம் சாலையில் உள்ள அம்பேத்கர் (ஆதிதிராவிடர்) அரசு கல்லூரி மாணவர் விடுதியில் திடீரென ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விடுதி மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மாணவர்கள் அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

அதையடுத்து, மாணவர்கள் கேட்கக்கூடிய அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாகச் செய்து கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, விடுதியைச் சீரமைக்கும் பணியானது இரவோடு இரவாக நடந்தது. மேலும் விடுதியில் தேவைப்படும் வசதிகளையும், தூய்மைப் பணிகளையும் செய்து முடித்து கிருமி நாசினிகள் தெளித்து தூய்மை படுத்தியுள்ளனர். இதனை, கோவை மாநகராட்சி நிர்வாகம் X வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் இரவோடு இரவாக விடுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வது அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை இடம் பெற்றுள்ளன. இப்பணிகளை விரைந்து முடித்த அதிகாரிகளுக்கும், உடனடியாகச் செய்துதர உத்தரவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் விடுதி மாணவர்கள் நன்றி தெரிவித்த காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படத்தில் இரவோடு இரவாகச் சாலை போடுவது, தெருவிளக்குகள் போடுவது போன்ற பணிகள் செய்து முடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதேபோல, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு முடித்து விட்டுச் சென்றவுடன், இரவோடு இரவாக விடுதியில் அடிப்படை வசதிகள், தூய்மைப் பணிகள் செய்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரது தரப்பில் பாராட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சந்தேஷ்காளி விவகாரம்; திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷேக் ஷாஜஹான் - 6 வருடங்களுக்கு கட்சியில் இருந்து நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details