தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பனை கட்டையால் அடித்துக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது! - walajapet man murder - WALAJAPET MAN MURDER

Walajapet murder: வாலாஜாபேட்டை அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பனை கட்டையால் அடித்துக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

கைதான ராஜேந்திரன் - கொலை செய்யப்பட்ட ரகோத்தமன்
கைதான ராஜேந்திரன் - கொலை செய்யப்பட்ட ரகோத்தமன் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 4:02 PM IST

வாலாஜாபேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பில்லியப்பா நகரைச் சேர்ந்தவர் ரகோத்தமன் (54). இவர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இதே போன்று, வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அடிக்கடி சந்தித்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி பகுதியில் உள்ள ராஜேந்திரனின் வீட்டில் ரகோத்தமன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் வழக்கம் போல மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கீழே இருந்த கட்டையை எடுத்து ரகோத்தமன் தலை மீது பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரகோத்தமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ரகோத்தமனை ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரகோத்தமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலாஜாபேட்டை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கரூரில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய போதை கும்பல்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details