சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்தோஷ்குமார் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 8 அன்று முடியவடைய உள்ளது. இந்த நிலையில், அவரின் பதவிக் காலத்தினை ஏப்ரல் 9 முதல் மேலும் ஒராண்டிற்கு நீடித்து தமிழ்நாடு ஆளுநரும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்
இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு! - துணைவேந்தர்களின் பதவிக்காலம்
Vice chancellors tenure extended: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களின் பதவிக் காலத்தை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
Etv Bharat
Published : Mar 7, 2024, 6:53 PM IST
அதேபோல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.ந.செல்வக்குமார் பதவிக்காலமும் ஏப்ரல் 8 உடன் முடியவடைய உள்ள நிலையில், அவரின் பதவிக்காலத்தினையும் ஏப்ரல் 9 முதல் மேலும் ஒராண்டிற்கு நீடித்து அப்பல்கலைக்கழகத்தின் வேந்ர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.. மார்ச் 26-ல் நேர்காணல்!