சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜன.30) தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெர்வித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை (ஜன.31) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும், பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், நாளை (ஜன.31) நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.