சென்னை:வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கி, நேற்று காலை முதல் ஏடிஎம் (ATM) இயந்திரத்திங்களில் பணத்தை லோடு செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்துள்ளது. வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் லோடு செய்யப்பட்ட நிலையில், கடைசியாக ஊரப்பாக்கம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்துக்கு 5 பணப்பைகளுடன் பணம் லோடு செய்யச் சென்றுள்ளனர்.
அப்போது பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் லோடு செய்யச் சென்ற வங்கி நபர்கள், வேனிலிருந்த ஐந்து பணப் பையில் உள்ள ரூபாய் 37.71 லட்சமும், அங்கு இருந்த செக்யூரிட்டி ஞானசேகரன் என்பவரும் காணாமல் போனதை அறிந்த வங்கி நபர்கள், வங்கி மேலாளர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.