சென்னை: கர்நாடக மாநிலம், பெங்களூர் விமான நிலைய பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 8 விமானங்கள், சென்னையில் தரை இறங்கின.
பெங்களூர் விமான நிலையத்திற்கு புவனேஸ்வரில் இருந்து சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ், டெல்லியில் இருந்து சென்ற விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ், மும்பையில் இருந்து சென்ற ஆகாஷ் ஏர்லைன்ஸ், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ், சிலிகுரி இருந்து சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவில் இருந்து சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ், சேலத்தில் இருந்து சென்ற அலையன்ஸ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 8 விமானங்கள் பெங்களூரில் தரையிறங்க முடியாமல், சென்னையில் தரை இறங்கியது.