தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சொந்த மண்ணில் சொதப்பிய குஜராத் டைட்டன்ஸ்… டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி! - IPL 2024 - IPL 2024

IPL 2024: குஜராத் டைடன்ஸ் உடனான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Etv Bharat
Etv Bharat

By ANI

Published : Apr 17, 2024, 10:53 PM IST

அகமதாபாத்: 17வது ஐபிஎல் தொடரின் 32வது போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் உடனான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆட்டத்தை துவக்கிய முதல் ஓவரிலேயே குஜராத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதிரடியாக துவக்கிய சுப்மன் கில், இஷாந்த் சர்மா பந்தில் பிருத்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களுக்கு அவுட்டானார். அதனைத் தொடர்ந்து, முகேஷ் குமார் பந்தில் சாஹா 2 ரன்களுக்கு போல்டானார். இதனையடுத்து, சுமித் குமாரின் அற்புதமான த்ரோவில் சாய் சுதர்சன் 12 ரன்களில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய மில்லரும், இஷாந்த் பந்தில் 2 ரன்களுக்கு அவுட்டானார்.

இதனைத் தொடர்ந்து, அபினவ் மனோகர் 8 ரன்களுக்கும், ஷாருக்கான் டக் அவுட்டாக குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து திணறியது. சற்று நேரம் தாக்குபிடித்த டெவாட்டியா, அக்சர் படேல் பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். குஜராத் அணிக்கு ரஷித் கான் மட்டும் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். இறுதியில், குஜராத் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் குஜராத் அணி ஐபிஎல் வரலாற்றில் தனது குறைந்த ரன்களை பதிவு செய்தது. மிகவும் எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு பிருத்வி ஷா, மெக்குர்க் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்தது. மெக்குர்க் 20 ரன்களுக்கு ஸ்பென்சர் பந்தில் அவுட்டானார்.

பிருத்வி ஷா 7 ரன்களில் வாரியர் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பொரேல், ஷாய் ஹோப் அதிரடியாக ஆடினர். பொரேல் 15, ஹோப் 19 என அடுத்தடுத்து அவுட்டான நிலையில், பண்ட் மற்றும் சுமித் குமார் ஆகியோர் சிக்சர், பவுண்டரிகளாக அடித்து டெல்லி அணி வெற்றியை உறுதி செய்தனர். டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:பெங்களூரு அணியை விற்பனை செய்ய திட்டம்? மகேஷ் பூபதியின் பதிவால் பரபரப்பு! என்ன நடந்தது? - RCB For Sale

ABOUT THE AUTHOR

...view details