மேஷம்: உங்களது தனிப்பட்ட செயல்திறன் காரணமாக, நீங்கள் முக்கியமான பரிவர்த்தனை ஒன்றை ஏற்படுத்துவீர்கள். உங்களது பேச்சுத்திறன் அனைவரையும் கவரும். நிதி ஆதாயம் கிடைக்கும். உடல்நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் குதூகலமும் மகிழ்ச்சியும் இருந்தாலும், நீங்கள் இன்று செய்யும் பணியின் மீது கவனம் செலுத்துவீர்கள். பின்னர் உங்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று அவர்களுடன் உரையாடி, மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள்.
மிதுனம்: இன்று, பல்வேறு மக்கள் உங்களிடம் பலவகையான கோரிக்கைகளை வைக்கக்கூடும். அவை அனைத்தையும் நிறைவேற்றுவதில் உங்களுக்கு சிரமம் இருக்கும். ஆனால், அவர்களைத் திருப்திப்படுத்த, நீங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவீர்கள். உங்களது செயல் திறனையும் ஆற்றலையும் மக்கள் பாராட்டுவார்கள்.
கடகம்: இன்று, மாற்றம் ஏற்படுவதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படவும். அமைதியாக இருப்பது நல்லது. சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொண்டால், உங்கள் பணி எளிதாக முடியும். இன்று மகிழ்ச்சியும், பொழுதுபோக்கும் இருக்கும். வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்: பல்வேறு மக்கள், உங்களைப் பாராட்டுவார்கள். ஆனால், நடந்தவற்றை நினைத்து நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள். சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காமல், அது குறித்து கவலை கொள்வீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, நீங்கள் உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கப்படுவீர்கள்.
கன்னி: இன்று குடும்ப விவகாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணத்தை உங்கள் குடும்பத்தினர் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தக விஷயத்தைப் பொறுத்தவரை, நிலைமை சாதாரணமாக இருக்கும். மாலையில் சிறிது ஓய்வாக நேரத்தைக் கழிக்கலாம். கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பும் உள்ளது.