மேஷம்: இன்று புரிந்து கொள்ள முடியாத மற்றும் அற்புதமான நிகழ்வால் குழப்பமடைவீர்கள். அது நீங்கள் எதிர்பாராததாக இருக்கலாம். ஆனால் நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாகலாம், நிலைமையை தலைகீழாக மாற்றாவிட்டாலும், நிச்சயமாகப் பல விஷயங்களை மதிப்பீடு செய்ய உதவும். இதைத்தவிர, காலக்கெடுவை சமாளிக்கச் சிரமப்படுவீர்கள். இருந்தாலும், உங்கள் வேலையின் முக்கியத்துவத்தைப் பற்றி பிறருக்கு எடுத்துச் சொல்லலாம்.
ரிஷபம்:நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் ஏமாற்றமும், எரிச்சலும் ஏற்படலாம். நபர்களையும், பொருட்களையும் பற்றி இயல்பாகவே உணர்வுப்பூர்வமாகக் கருதுபவர். உங்கள் அதீத அணுகுமுறை யாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தாது. தவறுகளை நியாயப்படுத்தும் மனப்போக்கு, விஷயங்களை மோசமாக்கலாம். அவர்களின் நியாயமான கோபத்தை நீங்கள் புறக்கணிப்பீர்கள். விஷயங்களை சரியான முறையில் மாற்றியமைத்துக் கொள்வதற்குப் பதிலாக பொருள் ஆதாயங்களின் பின் ஓடுவீர்கள்.
மிதுனம்:குடும்பத்தினருடன் பயணம் செய்ய விரும்பும் ஆசை அதிகரிக்கும். உங்கள் பயணத்தைத் திட்டமிடுவீர்கள். பயணத்திற்கு உகந்த நேரம் இது. உங்கள் வரவு செலவு திட்டத்திற்குள் பயணத் திட்டங்களை திருப்திகரமாக நிறைவேற்ற முடியும்.
கடகம்:அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தாலும், உங்களுடைய திறமையை உயரதிகாரிகள் முழுமையாக மதிக்காததால் மனம் வருத்தப்படுவீர்கள். அதை மனதின் ஆழத்திற்கு எடுத்துச் செல்லவோ அல்லது சோகமாக இருக்கவோ வேண்டாம். இறுதியில், உங்கள் உறுதியான மனோதைரியம் வெற்றி பெறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலை வேளையில் பதற்றமான சூழல் ஏற்படலாம்.
சிம்மம்:அனைத்து சவால்களையும், தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். எந்தவித சூழ்நிலையிலும் குறிப்பிட்ட இலக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதே உங்கள் இறுதி லட்சியமாக இருக்கும். வியாபாரத்திலோ, தொழிலிலோ கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சொந்த வாழ்க்கை இடையூறு ஏதுமின்றி சுமுகமாகத் தொடரும்.
கன்னி:பேச்சாற்றலும் ஆக்கப்பூர்வமான திறமைகளும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வீர்கள் என்ற போதிலும், எந்தவித அழுத்தமோ அல்லது சிக்கல் இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.