தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

வாழ்க்கைத் துணையை கண்டறியும் நாள்.. எந்த ராசிக்குத் தெரியுமா? - TODAY RASIPALAN IN TAMIL

டிசம்பர் 13ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

மேஷம்: இன்று ஒருவரின் உள்ளத்தை புண்படுத்த நேரிடலாம். நீங்கள் வலிமைமிக்க நிலையான உறவை, உங்கள் விருப்பப்படி ஏற்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையேயான உறவு வலுவடையும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்: கடின உழைப்பு இருந்தபோதிலும், உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைப்பது கடினம். பிற்பகலில் பயணம் செய்வதை தவிர்க்கவும். மாலை நேரங்களில் நிம்மதியாகவும், அழகாகவும் நேரத்தை செலவிடுவீர்கள்.

மிதுனம்:உங்களைச் சுற்றி உள்ளவர்கள் சந்தோஷமாக இருந்த போதிலும், உங்களுக்கான வேலைப்பளு அதிகரிக்கலாம். வியாபார சிக்கல்களை கவனமாகக் கையாள வேண்டும். இன்று வியாபார ரீதியான பயணத்தை மேற்கொள்ளலாம். தொழிலில் காரிய சித்தி அடைய சிறந்த நாளாக அமையும் வாய்ப்புள்ளது.

கடகம்: உங்கள் தலைமையில் செய்யப்படும் பணியில் பதட்டங்கள் ஏற்படும். போட்டியாளர்கள் இருப்பினும், வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களின் முயற்சியால் மகிழ்ச்சி கிடைக்கும்.

சிம்மம்:மனம் சொல்வதைக் கேட்காமல், சிந்தித்து செயல்படுவதன் மூலம் எல்லா விதமான செயல்களிலும் அபரிவிதமான வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டை புதுப்பித்தல் மற்றும் மாற்றங்கள் செய்ய முயற்சி செய்யலாம். இன்று உங்களுக்கு அனைத்து வகையிலும் ஏற்ற நாளாக அமையக்கூடும்.

கன்னி:மற்றவர்களின் மனதை புண்படுத்துபவரை அடையாளம் காட்டக் கூடிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கக்கூடும். நீண்டகால திருமணத் தடை நீங்கும். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கப் பெற்று உறவுகள் வலுப்படக் கூடும்.

துலாம்:நாகரீக உணர்வினால் வலிமையான ஆளுமையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்கக் கூடிய வாய்ப்புள்ளது. சில விசேஷ கூட்டத்தில் உங்களுக்கு முக்கியமானவர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. காதல் உணர்வு ஏற்படலாம்.

விருச்சிகம்:நிதானமாக செயல்படும் காலம். சரியான முடிவு எடுப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வது அவசியம். எந்த ஒரு முடிவையும் நன்கு ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் முயற்சிக்கான பலன் கிடைக்காமல் போகலாம். பணியின் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மாலை நேரத்தைச் செலவிட வாய்ப்புள்ளது.

தனுசு:உங்கள் எண்ணம் மற்றும் உணர்ச்சிகள் அதிகரிப்பதால், மற்றவர் முன்பு நீங்கள் உணர்ச்சிவசப்படுபவர் போல் தோன்றலாம். முற்பகலில் குடும்பம் அல்லது தொழில் சம்பந்தமான சந்திப்புகள் ஏற்படக்கூடும். மாலைப் பொழுதில் உங்களை அழகானவராகவும், புத்திசாலியாகவும் காட்டிக்கொள்ள முயல்வீர்கள்.

மகரம்:இன்று, உங்களின் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்களுக்கு வேலை அதிகம் இருந்த போதிலும், உங்களின் தனிப்பட்ட தேவைக்காக சிறிது நேரத்தை செலவிடுவீர்கள். பணியாற்றும் இடத்தில் மற்றவர்களின் புகழ்ச்சிக்கும், இனிப்பான வார்த்தைக்கு மயங்கி விடக்கூடாது. இல்லையெனில், பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்த நாள் மாணவர்களுக்கு ஏற்ற நாளாக அமையும்.

கும்பம்:இன்று கொண்டாட்டங்களும், சந்தோஷங்களும் நிறைந்த நாளாக இருக்கலாம். நீங்கள் இன்று ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய வாய்ப்புள்ளது. புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்துடன், அவர்களின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இந்த நாள் உங்களுக்கு எல்லாவற்றிலும் சிறந்த நாளாக இருக்கக்கூடும்.

மீனம்:நீங்கள் மற்றவர்களுடன் இணைந்து செய்யும் செயலால் நன்மை கிடைக்கப் பெறும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களின் வாழ்க்கைத் துணையை கண்டறியும் நாளாக அமையக்கூடும். உறவுகளிடம் அன்பு செலுத்தி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலையில் உங்களை புரிந்து கொண்டுள்ள சிறந்த பங்குதாரரை சந்திக்க வாய்ப்புள்ளது.

ABOUT THE AUTHOR

...view details