தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கறி குழம்பு சுவையில் காளான் கிரேவி; சப்பாத்தி, சாதத்திற்கு இதான் பெஸ்ட்! - MUSHROOM GRAVY RECIPE

சப்பாத்தி, பூரி, சாதம் உள்ளிட்ட அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும் காளான் கிரேவியை கறி குழம்பு சுவையில் எப்படி செய்வது என பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 27, 2025, 2:33 PM IST

Updated : Feb 27, 2025, 2:51 PM IST

அசைவத்தில் சிக்கன் என்றால் சைவத்தில் காளான் பலரது விருப்ப உணவாக இருக்கிறது. காளான் வைத்து செய்யப்படும் கிரேவி, குழம்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? அதுவும், கறி குழம்பு சுவையில் இருந்தால் சொல்லவா வேண்டும்? சப்பாத்தி, பூரி முதல் சாதம், வெரைட்டி ரைஸிற்கு அட்டகாசமாக இருக்கும் காளான் கிரேவியை கறி குழம்பு சுவையில் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

  • காளான் - 1/2 கிலோ
  • வெங்காயம் - 2
  • இஞ்சி - 1 சின்ன துண்டு
  • பச்சை மிளகாய் - 2
  • தக்காளி - 1
  • பூண்டு - 1 கைப்பிடி அளவு
  • கொத்தமல்லி - 1 கைப்பிடி
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய், நெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

காளான் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து தலா 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர், கழுவி நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து வதக்கவும். காளானில் இருந்து வரும் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து தனித்தட்டில் மாற்றி வைக்கவும்.
  • இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முடிந்த வரையில் நைசாக அரைக்கவும். அடுத்ததாக, அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில், சீரகம், அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அதன் பின்னர், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்து வரும் வரை வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • இப்போது, 1 கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து விழுதாக இதில் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும். அடுத்ததாக, நாம் வேக வைத்துள்ள காளானை சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
  • பின்னர், மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து அடுப்பை அணைத்தால் கறி குழம்பு சுவையில் இருக்கும் சுவையான காளான் கிரேவி தயார். அப்புறம் என்ன? இன்னைக்கே ட்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க..
Last Updated : Feb 27, 2025, 2:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details