உடல் எடையை குறைப்பது முதல் பல வகையான புற்றுநோய்களுக்கு மருந்தாக இருக்கும் கருஞ்சீரகத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன? யாரெல்லாம் கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது? கருஞ்சீரகத்தில் உள்ள தீமைகள் என்ன? என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம்..
- வியாதியின் கூர்மையை பொறுத்து கருஞ்சீரகத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மாறாக, மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணகக்கிலோ எடுக்கக்கூடாது.
- மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டால், சிறுநீரக பிரச்சனை, ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம் என அமெரிக்காவின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் செண்டர்(Memorial Sloan kettering ) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
- கருஞ்சீரகத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டு வரும் போது, நோய் பூர்ண குணமடையும். இதனை அலோபதி போல, வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டாம்.
- கர்ப்பிணிகள் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்திவரும் நிலையில், இதனை மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் செண்டரும் உறுதி செய்துள்ளது. கர்ப்பிணிகள் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டால், கருவில் உள்ள சிசுவிற்கும், கருப்பையிற்கும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், குழந்தைக்காக காத்திருப்பவர்களும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
- தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களும் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. பொதுவாக, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கருஞ்சீரகம் கொடுப்பது வழக்கத்தில் இருந்தாலும், இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது பச்சிளம் குழந்தையை பாதிக்கும்.
இதையும் படிங்க:பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டால் ஆண்களுக்கு அந்த பிரச்சனை வராது..!
- உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையை கருஞ்சீரகம் கொண்டிருப்பதால், குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளும் போது, இரத்த அழுத்தம் மேலும் குறையக்கூடும். அவசியம் கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பவர்கள் கால் டீஸ்பூனிற்கு அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது.
- இதே போல, லோ சுகர் பிரச்சனை இருப்பவர்களும் கருஞ்சீரகத்தை மிகக்குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் ஒரு மண்டலம் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளும் போது, சர்க்கரை அளவு நார்மலுக்கு வந்துவிடுகிறது.
- கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் இரத்த உறைநிலை குறைந்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், மூக்கின் வழியாக இரத்தம் வரும் பிரச்சனை உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சைட்டோகிரோம் பி450 (Cytochrome p450 substrate drug) மருத்து எடுத்துக்கொள்பவர்கள் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறது மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் செண்டர்.
இதையும் படிங்க: |