சென்னை:பெண்களுக்கு உதட்டின் மேல் பகுதி மற்றும் தாடை உள்ளிட்ட முகத்தின் ஒரு சில பகுதிகளில் ஆண்களைப் போலவே முடி வளருவதைப் பார்த்திருப்போம். அவர்களின் தன்னம்பிக்கை அளவை குறைக்கும் வகையில் இருக்கும் இந்த பிரச்சனையால் பெண்கள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர், அழகு நிலையங்கள் மற்றும் காஸ்மெட்டாலஜி மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்குத் தீர்வு காணவும் முயற்சிக்கின்றனர். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தாலும் அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் அவதிப்படும் பெண்கள் முன்னோர்கள் மேற்கொண்ட சில செயல்பாடுகளை தங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே போதும் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண முடியும்.
முகத்தில் முடி வளர என்ன காரணம்? உடலில் ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்படும் மாற்றத்தால் இந்த பிரச்சினை வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது ஆண்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை போலவே பெண்கள் உடலிலும் அந்த ஹார்மோன் சற்று அதிகமாகச் சுரக்கும் பொழுது இந்த முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும் எனவும், சாதாரணமாகப் பெண்களுக்கு இருக்கும் முகத்தின் முடியை ஷேவ் செய்வதன் மூலம் அது மேலும் அடத்தியாக வளர வழிவகை செய்யும் எனவும் கூறப்படுகிறது.
இதை முழுமையாக அகற்ற என்ன செய்யலாம்?முகத்தில் இருக்கும் முடி பெண்களின் அழகைப் பாதிக்கும் என்பதால் அதை உடனடியாக அகற்றியாக வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அது நிரந்தர தீர்வாக அமையாது எனக் கூறப்படுகிறது. இந்த முக முடிகளை அகற்ற நாள்தோறும் முகத்திற்கு மஞ்சள் கிழங்கை அரைத்து தேய்ப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.
மஞ்சளை எப்படிப் பயன்படுத்தினால் சிறந்த வகையில் தீர்வு காண முடியும்?மஞ்சளை மட்டும் அரைத்து தேய்ப்பதே சிறந்ததுதான். ஆனால் அதனுடன் இன்னும் சில பொருட்களைக் கலந்து ஒரு பேக் போல் முகத்தில் அப்ளை செய்து வந்தால் மேலும் சிறந்த பலன் கிடைக்கும்.