சென்னை: கூகுள் (google) தேடலில் அதிகம் தேடப்பட்ட படங்கள் வரிசையில் இரண்டு தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளது. பிரபல இணையதளம் கூகுள் இந்திய அளவில் இந்த 2024ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், இடங்கள் ஆகியவற்றில் டாப் 10 வரிசையை வெளியிட்டுள்ளது.
இந்த வரிசையில் இந்திய அளவில் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் வரிசையில் அமர் கௌஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் த்ரிபாதி உள்ளிட்ட பலர் நடித்த ‘stree 2’ இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலை பெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ’கல்கி 2898AD’ இடம்பெற்றுள்ளது.
’கல்கி 2898AD’ திரைப்படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வரிசையில் 4வது இடத்தில் ’லபாடா லேடீஸ்’ இடம்பெற்றுள்ளது. இந்த கூகுள் வரிசையில் 6வது இடத்தில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் 8வது இடத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (Greatest of all time) திரைப்படம் இடம்பெற்றுள்ளது.