சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இந்த ஆண்டு மோசமான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்த வாரமும் 7 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. கேரளாவின் புகழ்பெற்ற 'ஆடுஜீவிதம்' நாவலை மையப்படுத்தி பிருத்விராஜ், அமலாபால் ஆகியோர் நடிப்பில் 'ஆடுஜீவிதம்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உண்மை சம்பவத்தைக் கொண்டு பல ஆண்டுகளாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகி உள்ளது.
இதனையடுத்து திட்டம் இரண்டு, அடியே படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் ஹாட் ஸ்பாட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.