தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க 'போலி வாக்காளர்கள்' ! பாஜக மீது மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு! - MAMATA BANERJEE

தேர்தல் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து கொண்டே போலி வாக்காளர் பட்டியலை பாஜக தயாரிப்பதாகவும், மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போலி வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி (ANI)

By PTI

Published : Feb 27, 2025, 4:04 PM IST

கொல்கத்தா: தேர்தல் ஆணையர் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் பாஜக முறைகேடு செய்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் விளையாட்டு அரங்கில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்காக பாஜக பல்வேறு தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு செய்கிறது. அதனை தடுத்து நிறுத்தி சரி செய்ய கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தல்களில் பாஜக போலி வாக்காளர்கள் மூலமே வெற்றி பெற்றது. அதே போன்று தவறான யுக்தியை மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலிலும் பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து கொண்டே 'போலி வாக்காளர்கள்' பட்டியலை பாஜக தயாரிக்கிறது. மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 'போலி வாக்காளர்' பட்டியலை பாஜக தயாரித்து வைத்துள்ளது.

இது போன்று முறைகேடு செய்து தான் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் அக் கட்சி வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா தேர்தலில் எதிர்க்கட்சியினர் இந்த முறைகேட்டை தடுக்க தவறிவிட்டன. ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் போலி வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர். தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை காரணம் காட்டி வாக்காளர்களின் பெயரை நீக்க வாய்ப்புள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அந்த பணி வாக்காளர் பட்டியலில் இருந்து தொடங்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி பூத் கமிட்டியிலிருந்து தொடங்க வேண்டும். அதனை மாவட்டத் தலைவர் மேற்பார்வை செய்ய வேண்டும்” என்றார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேலும் பேசுகையில், “வாக்காளர் பட்டியலை பெற ஐடி தொழில்நுட்ப ஊடக குழு, பஞ்சாயத்து கவுன்சிலர் குழு உருவாக்கப்படும்.

இதையும் படிங்க:இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கி இருக்கிறது தெரியுமா...? பிற மாநில மக்களை எச்சரிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எனக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் குறித்து தகவல் அளிக்க வேண்டும். இந்த குழுவில் 4 பேர் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். மாவட்ட தலைவர் பூத் கமிட்டி உருவாக்கி அதனை மேற்பார்வையிட வேண்டும். எனக்கு பாஜக கட்சி மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் ஜனநாயகத்திற்கு தீங்கு செய்ய முயன்கின்றனர். மேலும் மதத்தின் பெயரில் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்றும் குற்றம்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details