ஹைதராபாத்:தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 200 கோடி) லஞ்சம் கொடுத்துள்ளதாக அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உட்பட ஏழு பேர் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றன. மேலும், கென்யா போன்ற நாடுகள் அதானி குழுமத்துடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன.
இந்த சூழலில், தெலங்கானாவின் 'யங் இந்தியா ஸ்கில்ஸ்' பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமம் அறிவித்திருந்த 100 கோடி ரூபாய் நன்கொடையை அம்மாநில அரசு அதிரடியாக ஏற்க மறுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்ளை சந்தித்து பேசிய அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, '' நாடு முழுவதும் அதானி தொடர்பான விவாதங்கள் சில நாட்களாக நடந்து வருகின்றன. தெலங்கானா அரசு அதானியிடம் இருந்து நிதி பெற்றதாக சிலர் விமர்சிக்கின்றனர். அதானியிடம் இருந்து எந்த ஒரு முதலீட்டையும் அரசியலமைப்பு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும்தான் நாங்கள் அனுமதிப்போம். நாட்டில் தொழில் தொடங்க எவருக்கும் உரிமை உண்டு.
இதையும் படிங்க: வக்பு சட்டத் திருத்த மசோதா: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகரிடம் நேரில் கடிதம்!