குவகாத்தி:அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டம் உள்ளிட்ட பிற பகுதிகளில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் தலைநகர் குவகாத்தி உள்பட பிற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்க கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (பிப்.27) வியாழக்கிழமை அதிகாலை சரியாக 2.25 மணியளவில், சுமார் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் எக்ஸ் (X) தளத்தில், "அசாம் மாநிலத்தில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி அதிகாலை 2:25:40 என்ற மணியளவில், அட்ச ரேகை - 26.28; 92.24 நீளத்தில், 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளது.
மேலும், நில அதிர்வின் தாக்கம் குறித்த விவரம் தெளிவாகத் தெரியவில்லை எனவும், 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்பது மிதமானது என்றே கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் போது, வீட்டின் உட்புறம் உள்ள பொருட்கள் அசைதல், சத்தங்கள் மற்றும் சிறிய அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்படுத்தும் திறன் கொண்டது.
நில அதிர்வு செயல்பாட்டின் மையப்பகுதி மற்றும் தாக்கம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மிதமானதாகக் கருதப்படுகிறது, உட்புறப் பொருட்களைக் குறிப்பிடத்தக்க அளவில் அசைத்தல், சத்தமிடும் சத்தங்கள் மற்றும் சிறிய சேதங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டது.
இதையும் படிங்க:"2026-ல் வரலாறு படைப்போம்" - 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு!
இந்தியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றான அசாமில், நிலநடுக்கம் என்பது பொதுவானவை எனக் கருதப்படுகிறது. இது நில அதிர்வு மண்டலத்தின் பிரிவு ஐந்தின் (V) கீழ் வருகிறது. அதாவது, இப்பகுதி வலுவான நிலநடுக்கங்களுக்கு உள்ளான ஆபத்தான பகுதி என்று அர்த்தம். எடுத்துக்காட்டாக, 1950 ஆம் ஆண்டு அசாம் - திபெத் நிலநடுக்கம் 8.6 ரிக்டர் அளவிலும், 1897 ஆம் ஆண்டு ஷில்லாங் பகுதியில் 8.1 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது. இந்த இரண்டும் தான் வரலாற்றில் மிக வலிமையானதாகக் கருதப்படுகிறது.
வங்காள விரிகுடாவில் 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்க ஏற்பட்ட சில நாட்களிலேயே, இன்று அதிகாலை அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி காலை 6.10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டதாகத் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.