கேதார்நாத்: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் பகுதியில் கடந்த மே மாதம் 24-ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த ஹெலிகாப்டரை பழுதுநீக்க மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் ராட்சத ரோப் கொண்டு எடுத்துச் செல்லப்பட்டபோது மந்தாகினி ஆற்றில் விழுந்து நொறுங்கியுள்ளதாகவும், சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கேதார்நாத் மாவட்ட சுற்றுலா அதிகாரி ராகுல் சௌபே கூறுகையில், "எம்ஐ-17 விமானம் மூலம் ஹெலிகாப்டரை கௌச்சர் விமான ஓடுதளத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்ல திட்டமிட்டு, சிறிது தூரம் சென்றவுடன் எம்ஐ-17 பேலன்ஸ் இழக்கத் தொடங்கியது. ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்றின் காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் பயணிகளோ, பொருட்களோ இல்லை, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்தார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்; மகனும் தாமரை கட்சியில் ஐக்கியம்!