ETV Bharat / state

வசதி படைத்தவர்களுக்கே உள்ளாட்சித் தேர்தலில் இடம் - அமைச்சர் கே.சி. வீரமணி - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்

வேலூர்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொருளாதாரத்தில்  உயர்ந்தவராக இருக்க வேண்டும் என்று அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்த கருத்து அதிமுக அடிமட்ட தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

minister kc veeramani speech local body election meeting in vellore
author img

By

Published : Nov 4, 2019, 10:26 PM IST

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வேலூர் மாவட்டத்தில் இன்று அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், "இந்த தேர்தல் நமது கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான தேர்தலாகும். எனவே அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும், குறிப்பாகத் தேர்வு செய்யப்படும் வேட்பாளர் பொருளாதாரத்தில் உயர்ந்தவராகவும், பகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் நாம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். பாஜக மீது சிறுபான்மையினருக்கு ஒருவித வெறுப்பு உள்ளது. அதன் காரணமாகத் தான் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம்.

அதிமுக ஆலோசனைக்கூட்டம்

இருப்பினும் இது பெரிய தோல்வி இல்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மூன்று ஓட்டுகள் கூடுதலாக வாங்கி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். எனவே, வரப்போகின்ற இந்த உள்ளாட்சித் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் ஆதரவைப் பெற நீங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்" என்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல் முறையாக அதிமுக சந்திக்கப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் வசதி படைத்தவர்களுக்குத் தான் போட்டியிட இடம் கிடைக்கும் என்று அமைச்சர் வீரமணி வெளிப்படையாகப் பேசியுள்ள சம்பவம் அதிமுக அடிமட்டத் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'ரஜினியை விட திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர்' - கொந்தளித்த சீமான்!

Intro:வேலூர் மாவட்டம்

காசு..பணம்..துட்டு..மணி, மணி கேசி வீரமணி

வசதி படைத்தவர்களுக்கே உள்ளாட்சி தேர்தலில் சீட் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சிBody:தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் இன்று அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில், "இந்த தேர்தல் நமது கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான தேர்தலாகும். எனவே அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் நீங்கள் நல்ல ஒரு வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் குறிப்பாக தேர்வு செய்யப்படும் வேட்பாளர் பொருளாதாரத்தில் உயர்ந்தவராகவும் ஏரியாவில் மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் நாம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம் அதற்கு காரணம், மத்திய அரசு பல்வேறு விதத்தில் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்தாலும் பாஜக மீது சிறுபான்மையினருக்கு ஒருவித வெறுப்பு உள்ளது அதன் காரணமாக தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம் இருப்பினும் இது பெரிய தோல்வி இல்லை ஒவ்வொரு பூத்திலும் மூன்று ஓட்டுகள் கூடுதலாக வாங்கி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம் எனவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் சிறுபான்யின மக்களின் ஆதரவை பெற நீங்கள் தீவிர பணியாற்ற வேண்டும் என்று பேசினார். பொதுவாக திமுக கட்சியில் தான் தேர்தல்களில் அதிக பணம் கொடுக்கும் நபர்களையே வேட்பாளராக தேர்வு செய்வதாக அக்கட்சியினர் மத்தியிலையே குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆனால் ஜெயலிதா இருக்கும்போது அதிமுகவில் சாதாரண கடைமட்ட தொண்டன் கூட சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் வர முடியும் என்ற நிலை இருந்தது இந்த சூழ்நிலையில் ஜெயல்லிதா மறைவுக்குப் பிறகு முதல் முறையாக அதிமுக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறது இதில் வசதி படைத்தவர்களுக்கு தான் சீட் கிடைக்கும் என்று அமைச்சர் வீரமணி வெளிப்படையாக பேசியுள்ள சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.