தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பொது மேடையில் ஓர் கருத்து முன்வைக்கப்படும் போது, அதற்கெதிராக மாற்றுக் கருத்து எழுப்பப்படுவது வழக்கம். அதுபோல் ரஜினிகாந்த் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கப்பட்டது. அது முடிந்து போன விஷயம். ஆனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் பொது மேடையில் யாரவது பேசினால் அதனை அரசு பார்த்துக் கொண்டிருக்காது நிச்சயமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மகளுக்கு 2ஆவது திருமணம்: ரஜினிக்கு பெரியாரின் செயலை நினைவூட்டும் செல்லூர் ராஜு!