டீசல் பயன்பாட்டைக் குறைக்கும்வகையில் நாடு முழுவதும் டீசல் ரயில் இன்ஜினுக்குப் பதிலாக மின்சார ரயில் இயக்குவதற்காக பணிகள் நடைபெற்றுவருகிறன. அதன் ஒருபகுதியாக திருச்சியிலிருந்து காரைக்கால் வரையும் திருவாரூரிலிருந்து கடலூர் வரையும் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.
இதன் முதற்கட்டமாக இன்று திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் வரை தனி மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கலந்துகொண்டு பயணிகளின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே அதிக அழுத்த மின்சாரம் செல்லும் பகுதிகளில் பதாகைகளை வைக்க அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து ரயிலுக்கு முன்பு பண்டிதர் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் மின்சார ரயில் சோதனை ஓட்டத்தை மனோகரன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியை ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.
இதையும் படிங்க: மார்க்கம் மாறி இயங்கிய ரயிலால் பயணிகள் அவதி