ETV Bharat / state

விவசாயிகளே வாங்க தெரிஞ்சுக்கலாம் -குறைந்த நீரில் அதிக லாபம்

நாகப்பட்டினம்: குறைந்த நீர் தேவையில் அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் மற்றும் நேரடி நெல் விதைப்பு ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு வயல்களில் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

nagapattinam
author img

By

Published : Sep 26, 2019, 11:28 PM IST

பருவமழை குறைந்து வரும் காலங்களிலும் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறையும் காலத்திலும் டெல்டா பகுதி விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு ஏக்கரில் நெல் பயிர் செய்ய 1,200 மில்லி லிட்டர் தண்ணீர் தேவை. இந்த தண்ணீர் தேவையை தீர்க்க நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுவதால் நீரும், நிலமும் உவர்ப்பாக மாறிவிடுகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு நீர்வள, நிலவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது.

இதனையொட்டி, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையமும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் நேரடி செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதில், ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூபாய் 15 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என்றும் அதேநேரம் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் செய்வதால் 60,000 ரூபாய் வரை ஏக்கருக்கு லாபம் ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சேற்று வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்வதன் மூலம் செலவையும் கட்டுப்படுத்தலாம். இது குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வதற்காக மணல்மேடு, மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் 250 ஏக்கரில் மாதிரி செயல் விளக்க திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. குத்தாலம் ஒன்றியத்தைச் சார்ந்த நச்சினார்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

Intro:குறைந்த நீர் தேவையில் அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் பயிர்கள் மற்றும் நேரடி நெல் விதைப்பு ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு வயல்களில் நேரடி பயிற்சி :-Body:பருவமழை குறைந்து வரும் காலங்களிலும் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறையும் காலத்திலும் டெல்டா பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு ஏக்கரில் நெல் பயிர் செய்ய 1,200 மில்லி லிட்டர் தண்ணீர் தேவை. இந்த தண்ணீர் தேவையை தீர்க்க நிலத்தடி நீர் அதிக அளவு உறிஞ்சப்படுவதால் நீரும் நிலமும் உவர்ப்பாக மாறிவிடுகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்து வருகின்றது. ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூபாய் 15; ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் அதேநேரம் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் செய்வதால் 60,000 ரூபாய் வரை ஏக்கருக்கு லாபம் ஈட்டமுடியும். பாரம்பரிய நெல் நடவு முறையில் நாற்றங்கால் அமைத்து பிறகு அதனை பறித்து நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகின்றது. சேற்று வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்வதன் மூலம் செலவையும் கட்டுப்படுத்த முடியும். இதுகுறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வதற்காக மணல்மேடு, மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் 250 ஏக்கரில் மாதிரி செயல் விளக்க திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. ; குத்தாலம் ஒன்றியத்தைச் சார்ந்த நச்சினார்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதன் மூலம் தண்ணீர் தேவை குறைந்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டுவது எப்படி என்று எடுத்துக் கூறப்பட்டது.

பேட்டி:-

1. ராஜ். தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.