ஆஷஸ் தொடரில் பல்வேறு சாதனைகளை புரிந்தும் முறியடித்தும் அசத்திய ஸ்டீவ் ஸ்மித், தற்போது 73 வருடமாக யாருமே முறியடிக்க முடியாத சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஸ்மித், 23 ரன்கள் அடித்திருந்தபோது, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களை கடந்தார்.
இதன்மூலம் மிக குறைந்த இன்னிங்ஸில்(126 இன்னிங்ஸ்) 7,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு முன் இங்கிலாந்தை சேர்ந்த ஹாமோன்ட்(131 இன்னிங்ஸ்) என்பவர் 1946ஆம் ஆண்டு இச்சாதனையை புரிந்திருந்தார். இந்திய வீரர்கள் சச்சின், சேவாக் முறையே 136, 134 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்கள் எடுத்திருந்தனர்.
ஸ்மித் 7,000 ரன்களை எடுத்ததால் டான் பிராட்மேனின் சாதனையும் முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர்களில் பிராட்மேன் 6,996 ரன்கள் எடுத்திருந்தது மட்டுமே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இப்போது இந்தச் சாதனையும் தகர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வார்னரின் முச்சதத்தால் உச்சம் தொட்ட ஆஸ்திரேலியா... அச்சத்தில் பாகிஸ்தான்!