ETV Bharat / opinion

வெங்காய ஏற்றுமதி தடைக்கான நீக்கம்! கதறும் நேபாளம், ஆனந்த கண்ணீரில் வங்கதேசம்! என்ன காரணம்? - India Lift Onion export ban

author img

By Aroonim Bhuyan

Published : May 7, 2024, 2:23 PM IST

Etv Bharat
Representative Image ((Photo: Getty Images))

ஐந்து மாதங்களுக்கு பிறகு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா தளர்த்தியுள்ளது. இந்தியாவின் இந்த அறிவிப்பால் வங்கதேசத்தில் விலை குறைந்தும், நேபாளத்தில் விலை அதிகரித்தும் காணப்படுகிறது. இந்தியாவின் அறிவிப்பால் இரு அருகாமை நாடுகள் இருவேறு பிரச்சினைகள் எதிர்கொள்ள என்ன காரணம் என ஈடிவி பாரத் அரூனிம் புயான் விளக்குகிறார்.

டெல்லி: ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பின் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை தளர்த்தி உள்ளது. உள்நாட்டில் வெங்காய உற்பத்தி அதிகரிப்பு, விலை நிலைத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் வெங்காய ஏற்றுமதிக்கான தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்தியா அதன் நட்பு நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி தடையை தளர்த்தியது. அதன்படி வங்கதேசத்தில் வெங்காய விலை வீழச்சியை சந்தித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசீயஸ், இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு மத்தியில் கடந்த மே 4ஆம் தேதி வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை தளர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

நாட்டில் காரீப் பருவத்தில் வெங்காய உற்பத்தி அதிகரிப்பு, சாதகமான பருவமழை சூழல், சில்லரை மற்றும் மொத்த விற்பனையில் வெங்காய சந்தை நிலவரத்தை ஸ்திரத்தன்மையோடு கையாளுவது உள்ளிட்ட காரணங்களால் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு தளர்த்தி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான செயலாளர் நிதி கரே, வெங்காய ஏற்றுமதிக்கான அனைத்து தடைகளும் நீக்கப்படடுவதாக தெரிவித்தார். நடப்பாண்டின் ராபி பருவத்தில் நடைபெற்ற வெங்காய உற்பத்தி மற்றும் காரீப் பருவத்திற்கு தேவையான நிலவும் சாதாரண பருவமழை சூழல் காரணமாக வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், தற்போதைய சில்லறை மற்றும் மொத்த விற்பனை வெங்காய சந்தை நிலவும் விலை நிலைத்தன்மை மற்றும் சர்வதேச அளவில் ஏறபட்டுள்ள வெங்காயத்திற்கான தேவை மற்றும் விலை சூழ்நிலையை கருத்தில் கொண்டுள்ளதாக அவர் கூறினார். நடப்பாண்டு ராபி பருவத்தில் உள்நாட்டில் 191 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் வெளியிடப்பட்டு உள்ளன. உள்நாட்டில் மாதந்திர நுகர்வுக்கு தேவைப்படும் 17 லட்ச டன் வெங்காய தேவையை இதன் மூலம் பூர்த்தி செய்யப்படும்.

வெங்காயத்தின் முக்கிய ஆதாரங்களின் ஒன்றாக இந்தியா விளங்குவது ஏன்?

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய வெங்கயா உற்பத்தியாளர் என்றால் அது இந்தியா தான். சர்வதேச வெங்காய உற்பத்தியில் 20 சதவீதம் இந்தியாவில் விளைவிக்கப்படுகின்றன. இந்தியாவில் நிலவும் சரியான தட்பவெட்ப நிலையில், பரந்த விவசாய நிலம் மற்றும் சிறந்த நீர்பாசன அமைப்புகள் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் வெங்காய உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

இந்தியாவில் பல்வேறு வகையான காலநிலை சூழல்கள் உள்ளன, அதனால் ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான வெங்காயங்களை பயிரிட ஏதுவான நிலை நிலவுகிறது. வெங்காயம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முதன்மை இடங்களில் உள்ளன.

இங்கு உள்ள மண் மற்றும் வெப்பநிலை சூழல் வெங்காய சாகுபடிக்கு உகந்ததாக உள்ளன. இந்தியாவில் உள்நாட்டு நுகர்வு மற்றும் ஏற்றுமதிக்கு தேவையான வெங்காயம் உற்பத்தி உள்ளது. மேலும் தடையற்ற விநியோகம் மற்றும் உற்பத்தி செலவு குறைவு, மலிவு விலை உள்ளிட்ட காரணங்களால் தெற்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் இந்திய வெங்காயங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உலக அளவில் வெங்காய ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்கிறது. வெங்காயம் ஏற்றுமதி சீராக நடைபெறுவதற்கு பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சி, மாறி வரும் உணவு முறைகள் மற்றும் வெங்காயத்தை பெரிதும் நம்பியிருக்கும் உணவு வகைகள் உள்ளிட்ட காரணங்களால் வெங்காயத்திற்கான உலகளாவிய தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா நம்பகரமான ஆதாரமாக உள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதிக்க என்ன காரணம்?

சர்வதேச சந்தையில் வெங்காயத்திற்கான தேவை நிலவரம், முந்தைய நிதி ஆண்டின் காரீப் மற்றும் ராபி பருவத்தில் வெங்காய உற்பத்தி மற்றும் உள்நாட்டு வெங்காய நுகர்வு தேவை உள்ளிட்ட காரணங்களை வரையறுத்து வெங்காய ஏற்றுமதிக்கான தடை என்பது விதிக்கப்படுகிறது. முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

வழக்கமாக எதிர்பார்க்கப்பட்ட காரீப் மற்றும் ராபி பருவத்தில் வெங்காய உற்பத்தி 20 சதவீதம் வரை குறைந்தது, அதனால் உள்நாட்டு வெங்காய சப்ளைக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு காரணமாக 2024 ராபி பயிர் சாகுபடி வரும் வரை நிலையான விலையை பராமரிக்க அரசுக்கு உதவியது.

பருவம் மற்றும் மண்வாகு ஆகியவற்றை பொறுத்து நாட்டில் காரீப் மற்றும் ராபி ஆகிய இரண்டு பருவங்களிலும் வெங்காய உற்பத்தி செய்யப்படுகின்றன.

வெங்காய உற்பத்தியில் இந்தியாவின் இதயம் எது?

நாட்டின் ஒட்டுமொத்த வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிராவில் தான் அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்யப்படுகிறது. நாசிக், புனே, அகமதுநகர், சதரா ஆகிய பகுதிகளில் வெங்காய உற்பத்தியின் உயிர்நாடியாக உள்ளன. சாதகமான காலநிலை, பரந்த நிலப்பரப்பு, விவசாய சாகுபடிக்கான நுணக்கங்கள் ஆகியவற்றின் மூலம் மகாராஷ்டிரா வெங்காய உற்பத்தியின் உயிர் நாடியாக உள்ளது.

இங்கு காரீப் மற்றும் ராபி ஆகிய இரண்டு பருவங்களிலும் வெங்காயம் பயிரிடப்படுகிறது. உள் மாநில தேவையை தொடர்ந்து மற்ற மாநிலங்களின் வெங்காய நுகர்வை பூர்த்தி செய்யும் அளவுக்கு மகாராஷ்டிராவில் வெங்காய உற்பத்தி செய்யப்படுகின்றன.

வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியததால் வங்கதேசம் எவ்வாறு பயன் பெறும்?

இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கான தடை தள்ளர்த்தப்பட்டதை தொடர்ந்து உள்நாட்டில் வெங்காய விலை படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளதாக வங்கதேச பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா - வங்கதேச எல்லையில் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிலி பஜார் இரு நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதியில் உயிர் நாடியாக உள்ளது.

இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கான தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து வங்கதேசத்தில் கிலோ வெங்காயம் 10 ரூபாய் வரை விலை குறைந்ததாக ஹிலி பஜார் பகுதியில் வசித்து வருபவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து இருந்த நிலையில், ஏற்றுமதிக்கான தடையை இந்தியா தளர்த்தியதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

வரத்து குறைந்ததால் வியாபாரிகள் விலையை உயர்த்தினர். திடீரென்று, அனைத்து கடைகளிலும் வெங்காயம் சரளமாக கிடைக்கின்றன. இன்னும், இந்திய வெங்காயம் வராத நிலையில் இது வணிகர்களின் சந்தை கையாளுதலை குறிக்கிறது என்றும் அரசு இதில் தலையிட்டு வெங்காய சந்தையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் தளர்வால் நேபாளத்தில் வெங்காய விலை உயர என்னக் காரணம்?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்ட அதே நேரம் மறு உத்தரவு வரும் வரை வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 45 ஆயிரத்து 890 ரூபாயாக நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சகம் நிா்ணயம் செய்தது. தற்போது நேபாளத்தில் அந்நாட்டு விலை மதிப்பின் படி ஒரு கிலோ வெங்காயம் 60 நேபாள ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தற்போது இந்தியாவின் தடை நீக்கத்தால் நேபாளத்தில் ஒரு கிலோ வெங்காயம் 100 நோபாள ரூபாய் வரை செல்லக் கூடும் எனக் கூறப்படுகிறது. கடந்த மாதங்களில் இந்திய தடை இருந்த போதிலும் வெங்காயம் விநியோகம் சாதாரணமாக இருந்தது. ஆனால் இப்போது, ​​குறைந்தபட்ச ஏற்றுமதி விலையால் நேபாளத்தில் வெங்காய விலை அதிகரிக்கக் கூடும் என்று நேபாளத்தின் காய்கறி வர்த்தக மையமான கலிமதி பழங்கள் மற்றும் காய்கறி சந்தை மேம்பாட்டு வாரியத்தின் தகவல் அதிகாரி பினாய் ஷ்ரேஸ்தா தெரிவித்து உள்ளார்.

மேலும், வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தாலும், தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான விலை வித்தியாசம் காரணமாக நேபாளத்தில் கடத்தல் செழித்து வளர்ந்ததாக ஷ்ரேஸ்தா தெரிவித்து உள்ளார். வெங்காய ஏற்றுமதி மீதான தடையை இந்தியா நீக்கியது சிலரிடையே ஆனந்தக் கண்ணீரையும், சிலரிடையே சோகத்தையும் வரவழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 90 வயதை கடந்த இந்திய ரிசர்வ் வங்கி! சர்வதேச அளவில் சந்தித்த சவால்களும்... சாதனைகளும்..! - 90 Years Of RBI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.